தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பது என் கடமை: மதுரையில் ராகுல்காந்தி

Author
Fathima- inTamilnadu
Report

உலக புகழ்பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது, இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி தனி விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.

அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த ராகுல் காந்தியுடன், உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, தமிழ் காலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காக்க வேண்டியது தன் கடமை.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் காலாச்சாரமும் பாரம்பரியமும் இந்தியாவிற்கு தேவையான ஒன்று.

அவை மதிக்கப்பட வேண்டியவை. உங்களது உணர்ச்சிகளையும் கலாச்சாரத்தையும் பாராட்டுவதற்காகவே தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்று தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 1 சவரன் மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.