பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று மாலை 6.30 மணிக்கு, மகரஜோதி தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.
ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.