தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக போட்டுக் கொண்ட முத்துமாரி

Author
Fathima- inTamilnadu
Report

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதன்முறையாக முத்துமாரி என்ற சுகாதார பணியாளருக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இன்று முதல் இந்தியா முழுவதும் போடத் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவாக்சின் மருந்துகளும் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்படவிருக்கிறது.

அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் முதல் தடுப்பூசி சுகாதார பணியாளரான முத்துமாரி என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் முத்துமாரி சுகாதார பணியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.