சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துரைமுருகன்

Author
Fathima- inTamilnadu
Report

வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன் இன்று வீடு திரும்பினார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வெள்ளியன்று இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட போது வாயு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சையளித்ததன் விளைவாக நலமானார், இதனை தொடர்ந்து இன்று மதியம் 2 மணியளவில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.