மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சசிகலா திடீரென சிறையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இதனையடுத்து அவர் பெங்களுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காரோண தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளன.

பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஆன்டிஜென், ராபிட் கிட் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.