சசிகலாவை காண துடிக்கும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

சசிகலா அவர்களை நேரில் சந்திக்க துடித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா அவர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த தண்டனைக் காலம் வருகிற ஜனவரி 27ம் தேதி முடிவடைந்து அவர் விடுதலை ஆகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா அதிமுகவிலேயே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவந்தாலும் அவர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சசிகலா கை காட்டியே அந்தப் பதவிகளை அடைந்தனர் என சசிகலா ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். விடுதலையான பின்னர் யார் யாரெல்லாம் சசிகலா பக்கம் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரசியல் நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.