சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் தயாராகி வரும் புதிய பங்களா

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

போயஸ் கார்டனில் சசிகலாவுக்காக புதிய பங்களாவின் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுதி நிமிடம் வரை அவரோடு போயஸ் கார்டன் இல்லத்தில் உடனிருந்தவர் சசிகலா. தற்போது அந்த இல்லம் ஜெயலலிதா அவர்களின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரில் உள்ள இடத்தில் சசிகலாவுக்காக புதிய பங்களாவை கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.

13 கிரவுண்ட் கொண்ட இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் சசிகலாவுக்காக அந்த பங்களா கட்டப்பட்டது. வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நோட்டீஸ் ஒட்டினர். இருப்பினும் பணிகள் தடைபடவில்லை.

வருமான வரியால் முடக்கப்பட்ட சொத்தின் சட்ட ரீதியான முடக்கம் முடிவுக்கு வரும் வரையில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் புதிய பங்களா கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.