சசிகலாவின் உயிருக்கே ஆபத்து: சகோதரர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

Author
Santhan- inTamilnadu
Report

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரின் சகோதரர் திவாகரன் வேதனையுடன் கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன் அக்ரஹார சிறையில் சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வரும் 27-ஆம் திகதி விடுதலையாகவுள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ கடிதம் கூட, சசிகலாவின் வழக்கறிஞருக்கு கிடைத்துவிட்டது. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இவரின் வருகை மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் அங்கிருக்கும் பெளரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சக்கர நாற்காலியில் பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகியிருந்தது.

இதனால் சசிகலாவின் உடல்நிலை மிக மோசமாகிவிட்டதா என்றும், இத்தனை நாட்கள் நன்றாக இருந்த அவரின் உடல்நிலை எப்படி இப்படி மோசமாகும் என்ற கேள்வியும் எழுந்து வரும் நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், சிறைச்சாலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியான சிகிச்சை இல்லை.

அவருடைய உயிருக்கே ஆபத்து என்று வேதனையுடன் கூறியுள்ளார்.