முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கவில்லை. ஜோ பைடன் பதவியேற்பிலும் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம் 150 ஆண்டுகளாக வழக்கத்திலிருந்த நடைமுறையை முறித்தார் ட்ரம்ப். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார்.
இந்தக் கடிதம் மிகவும் கனிவானதாக இருந்ததாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசிய பிறகு அந்த கடிதத்தில் உள்ள விஷயத்தைப் பற்றி பொது வெளியில் பேசுவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடைசி வரை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.