திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் - திருமாவளவன்

Author
Subash- inTamilnadu
Report

சட்டமன்ற தேர்தல் தேர்தல் வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இரு பக்கங்களிலும் கூட்டணி இன்னும் உறுதியாகாமல் தான் உள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

புதுச்சேரியில் காங்கிஸ் கட்சியை நீக்கிவிட்டு, திமுக தனித்து போட்டியிட முடிவுசெய்து, ஏற்கனவே ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் அதிருப்தியில் உள்ளது. இது தமிழக அரசியல் களத்திலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவரும் இதே நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இத்தனை நாட்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன், இப்போது திமுகவின் சின்னத்தில் நிற்க தயார் என்று ஒரு ஆங்கில பத்திரிக்கிகைக்கு பேட்டி அளித்துள்ளார். இது அக்கட்சியின் தனித்தன்மையை இழக்க வைக்கும் ஒரு செயலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

200 தொகுதிகளில் திமுக மட்டும் போட்டியிடவேண்டும் என்று ஐ-பாக் நிறுவனம் தொடர்ந்து திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. அதே போல கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்களையே கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும் என்றும் வற்புறுத்திவருகிறது.

அதன் வெளிப்பாடே திருமாவளவன் மற்றும் வைகோ போன்ற கட்சித்தலைவர்கள் பேட்டிகள். திமுக போன்ற கட்சி தலைவர்களை போற்றிபேசிட கூட்டணி காட்சிகள் தேவை, அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆட்கள் சேர்த்திட கூட்டணி கட்சிகளின் ஆள் பலம் தேவை, கூட்டணியின் பெரிய கட்சியின் வெற்றிக்காக போராட ஆட்கள் தேவை. ஆனால் தனி சின்னம் இல்லை என்ற கூற்றை ஏப்படி விசிக போன்ற காட்சிகள் ஏற்க முடியும்?

இப்படி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், சிறு கட்சிகள் தங்களது வாக்கு வங்கிகளையும் பெரிய கட்சிக்கு நாளடைவில் விட்டுக்கொடுத்துவிடுகின்றனர். மேலும், திமுகவின் சின்னத்தில் நிற்கும் பட்சத்தில், பிற கட்சிகளில் இருந்து தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏகள் சட்டமன்றத்தில் கூட சுதந்திரமாக செயல்பட முடியாது.

அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டையே பிற கட்சிகளும் எடுக்கவேண்டும் என்கிற சூழல்கள் ஏற்படும், இப்படி பெரிய காட்சிகள் கூறும் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டு, தங்களது கட்சியை பெரிய கட்சிகளிடம் அடகு வைப்பது போல ஆகிவிடும், இது அனைத்தையும் கவனத்தில்கொண்டு திருமாவளவன் ,வைகோ போன்ற தலைவர்கள் தங்களது முடிவில் உறுதியுடன் இருக்கவேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.