தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 23 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட சூழலே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.