சசிகலா விசயத்தில் இவர்கள் மீது சந்தேகம் இருக்கு- வழக்கறிஞர் தகவல்

Author
Fathima- inTamilnadu
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சசிகலா சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வருகிற 27ம் தேதி விடுதலையாக உள்ளார்.

இந்நிலையில் கடும் மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்த போது, சசிகலா நலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன.

சசிகலாவின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தார்.

இதற்கிடையே சசிகலாவின் வழக்கறிஞர் ராஜராஜன் பேசுகையில், மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை சந்தேகத்தை தருகிறது என தெரிவித்துள்ளார்.