கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து சசிகலா இன்று விடுதலையானார்.
சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் தினகரன், வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் உள்ளனர்.
முன்னதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று ஆவணங்களில் சசிகலாவின் கையொப்பம் பெற்று பின் அதற்கான நகலை மருத்துவமனை நிர்வாகத்திடமும் அளித்தனர்.
4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார்;
இந்த நிலையில் ,சசிகலாவின் தண்டனைகாலம் முடிந்தாலும் வரும் 31 ம் தேதிவரை சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .