சசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்

Author
Nalini- inTamilnadu
Report

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் மேலும் தகவல் தெரிவித்ததாவது -

சசிகலா சுயநினைவுடன் உள்ளார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். கொரோனா தோற்று குறைந்து, தற்போது அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இன்று மாலை ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இந்த பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால் சசிகலா முழுவதும் குணமடைவார் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.