புதுச்சேரியில் நடப்பது தமிழகத்துக்கான ஒத்திகை - திருமாவளவன் எச்சரிக்கை

Author
Mohan Elango- inTamilnadu
Report

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிருபிக்க இயலாமல் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் நடந்து வரும் நிகழ்வுகள் யாரும் எதிர்பார்க்காதவையாக உள்ளது.

பாஜகவுக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பிற்கு விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும்; புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதில் மேலும், “மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத பாஜக, இப்படி பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.