“கட்சியை காக்க வீட்டில் தீபம் ஏற்றுங்கள்” : ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள்

Author
Subash- inTamilnadu
Report

பிப்ரவரி 24-இல் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இபிஎஸ் - ஓபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும் மரியாதை செலுத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பிப். 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு இல்லங்களில் விளக்கு ஏற்ற அதிமுவினருக்கு முதல்வர் துணை முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் தொண்டர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். அதில், அதிமுகவை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்கு தான் இயக்கம் சொந்தம்.

அதிமுகவை விலை கொடுத்து ,வசைபாடி, வசிபடுத்தியோ வாங்க முடியாது. நல்லாட்சி பெற்ற மக்களுக்கும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள். எதிரிகளும் துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு நம் படையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உழைப்பு ,உத்வேகம் ,ஒற்றுமை உணர்வால் அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிப்ரவரி 24 மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்.

இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் “என் இல்லம் அம்மாவின் இல்லம்” என்று உளமார நினைத்துக் கொண்டு ,உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.

கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆத்மாவிடம் பிரார்த்தனை செய்து, “உயிர் மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் காப்பேன் . இது அம்மா மீது ஆணை என்று கூறுங்கள்”.

இந்த உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.