கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு இருந்த நெற்பயிர்கள் திடீரென பெய்த மழையால் 4 ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டது.
வெள்ளம் சூழ்ந்த வயலில் விவசாயி கண்கலங்கி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
தற்போது அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நிவர் புயல், புரேவி புயலுக்கு தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்தால் அத்தனையும் பாலாகி விடுமே என்று அஞ்சினர்.
அவர்கள் அஞ்சியது போலவே கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது மழை. பலமணி நேரம் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெற் பயிர்கள் மூழ்கின குமளங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஜோதி என்பவர் அப்பகுதியில் 4 ஏக்கரில் சம்பா நெல் பயிரிட்டு இருந்தார் .
அறுவடைக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் பருவம் தப்பிய கன மழையில் ஜோதி பயிரிட்டு இருந்த நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. விவசாயி அழுது புரண்டார் .
அனைத்தும் நீரில் மூழ்கியதை கண்ட ஜோதி வயலில் இறங்கி வெள்ள நீரில் விழுந்து அழுது புரண்டு. கலங்க வைக்கும் கண்ணீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.