தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்..

Author
Mohan Elango- inTamilnadu
Report

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவானர் இன்று அரங்கில் நடைபெற இருக்கிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் கலைவானர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டால் அதற்கு பிறகு புதிய திட்டங்கள், நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகள் எதுவும் அறிவிக்க முடியாது.

இதனால் தமிழக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

மேலும் 110 விதியின் கீழ் சட்டமன்ற தேர்தலை ஒட்டி சில கவர்ச்சியான அறிவிப்புகளும் திட்டங்களும் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.