சேலம் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை - ஜாமின் கிடைக்காததால் விரக்தி

Author
Mohan Elango- inTamilnadu
Report

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 வயது பள்ளி மாணவியை அசோக்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அசோக்குமார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அசோக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த இவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.