பட்ஜெட்டை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்: தமிழகம் 50 ஆண்டுகள் பின் தங்கியுள்ளதாக துரை முருகன் குற்றச்சாட்டு

Author
Mohan Elango- inTamilnadu
Report

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தேர்தலுக்கு முன்பான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கலைவானர் அரங்கில் தாக்கல் செய்தார்.

அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பட்ஜெட் தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ துரை முருகன், “தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுக அரசு 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. தமிழகத்தில் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்செய்யப்படும்.

திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ₹1 லட்சம் கோடியாக இருந்தது; தற்போது ₹5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியதுதான் அதிமுகவின் சாதனை” என்றார்.