பட்டுச்சட்டையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஎஸ்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Author
Mohan Elango- inTamilnadu
Report

பட்டுச்சட்டையுடன் வந்த தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் அறிவித்துள்ள முக்கியமானவற்றை பார்ப்போம்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கான நிதி உதவி அதிகரிப்பு, கனடாவின் டொரொண்டோ பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க நிதி உதவி, தைப்பூசம் திருநாள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடன் பல்வேறு வரிவருவாய்களில் மாநில அரசின் பங்கு பெருமளவு குறைப்பு, மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வையில் தமிழகத்துக்கான பங்கு குறைந்துள்ளது.

சுகாதார துறைக்கு ரூ19,420 கோடி நிதி ஒதுக்கீடு ரூ1,580 கோடியில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். உயர்கல்வி துறைக்கு ரூ5478 நிதி ஒதுக்கீடு, 6 முதல் 10 வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ 6,683 கோடி ஒதுக்கீடு, தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69% ஆக இருக்கும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு- ஓபிஎஸ், பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3,700 கோடி நிதி ஒதுக்கீடு, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தமிழகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி.

அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ144 கோடி நிதி ஒதுக்கீடு, 55.67 லட்சம் ஏழை குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணமடைந்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி, கால்நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடக்கம்.

தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமலில் உள்ளது, இயற்கை பேரிடர்: 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை ரூ 13,000-ல் இருந்து ரூ20,000 ஆக உயர்வு, 15.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ1,715 கோடி நிவாரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

2,000 மின்சார பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும், காவல்துறையை நவீனமயமாக்க ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ5000 கோடி நிதி ஒதுக்கீடு, ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ1,932 கோடி நிதி ஒதுக்கீடு, சமூக நலத்துறைக்கு ரூ1,953 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள், 18 வருவாய் கோட்டங்கள் உருவாக்கம், கைத்தறி துறைக்கு ரூ1,224 கோடி நிதி ஒதுக்கீடு.

தாமிரபரணி, கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச்சில் நிறைவடையும், சரபங்கா நீரேற்று திட்டம் விரைவில் நிறைவடையும், கரூர் அருகே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடக்கம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS சிறப்பு திட்டம்- ரூ.688.48 கோடி நிதி ஒதுக்கீடு.