இந்தியாவை விட்டு வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்.. ஆட்குறைப்பை தொடங்கியது

Author
Mohan Elango- inTechnology
Report
0Shares

உலகின் புகழ்பெற்ற மோட்டர் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்திருந்தது. தற்போதூ அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய செயல்பாடுகளை குறைத்துகொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து படிப்படியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.

லாபம் தருகின்ற வாகனங்களையும் சந்தையையும் நோக்கி நகரப்போவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் தன்னுடைய 5% சந்தையை மட்டுமே வைத்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறுவதன் முதல் கட்டமாக 70 ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்