வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்தால் இதையெல்லாம் செய்ய வேண்டும்.!

Author
Mohan Elango- inTechnology
Report

வாட்ஸ்ஆப்பின் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று இணையத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை (Terms and Privacy Policy) மாற்றி அமைத்துள்ளது WhatsApp.

அதன்படி பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். வருகிற பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் வாட்ஸ் ஆப் கணக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியிருந்தது. அதற்குப் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி பயனர்களின் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் உள்ளிட்ட சுயவிவரங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் பகிர ஒப்புதல் கேட்டு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்பதை விருப்பத் தேர்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் பெரும்பாலான மக்கள் கோபமாகக் காணப்படுகிறார்கள்.

இதனால் பலரும் வாட்ஸ் ஆப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.

அவ்வாறு நீங்கள் உங்கள் வாட்ஸ்அப்பை நீக்க விரும்பினால் கீழ்கண்ட விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

செயலியை Uninstall செய்வது சிறந்த தீர்வு அல்ல செயலியை Uninstall செய்வதன் மூலம், உங்கள் கணக்கை முடக்க முடியாது. உங்கள் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்க, ஒரு சிறப்பு செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.

வாட்ஸ்அப்பை நிரந்தரமாக நீக்க இது தான் ஒரே வழி

1. முதலில் உங்கள் iOS அல்லது Android தொலைபேசியில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.

2. உங்கள் Android தொலைபேசியின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்

3. இப்போது உங்கள் Account விருப்பத்தை சொடுக்கவும். 4

. Delete My Account என்பதைத் தட்டவும்

5. புதிய பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு Delete My Account என்பதைக் கிளிக் செய்க

6. Delete பொத்தானை அழுத்துவதற்கு முன் நீங்கள் காரணம் சொல்ல வேண்டும்.

7. இப்போது Delete My Account என்பதை மீண்டும் தட்டவும். ஜனவரி 5 ஆம் தேதி, வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This