இந்தியாவுக்கு விமானங்கள் இயக்க தடை விதித்த சவுதி அரேபியா.! ஏன்?

Author
Mohan Elango- inWorld
Report
0Shares

கொரோனா வைரஸ் பரவல் 71 நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் முதலாம் கட்ட பரவல் தணிந்திருந்த ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மீண்டும் புதிய தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

அதே சமயம் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சீராக அதிகரித்து வருகின்றன. ஒரே நாளில் அதிக அளவிலான பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் இந்தியாவுக்கு பயணிகள் விமான போக்குவரத்தை இயக்க தடை விதித்துள்ளது.

இந்த நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பாக இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் அரசும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.