மனைவியின் ஆசைக்காக யானை வாங்கிய கணவன்: சுவாரசிய சம்பவம்

Author
Fathima- inWorld
Report
0Shares

வங்கதேசத்தில் மனைவியின் ஆசைக்காக கணவன் யானை வாங்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய், இவரது மனைவி துளசி ராணி தசி.

மனைவியின் மீது அதீத பிரியம் கொண்ட துலால், அவர் ஆசைப்படுவதை எல்லாம் நிறைவேற்றுவாராம்.

சமீபத்தில் கூட தன்னுடைய மனைவி யானை வாங்க ஆசைப்பட, உடனடியாக நிலத்தை விற்று யானை வாங்கிவிட்டாராம்.

இதற்காக மிருகங்கள் விற்பனை செய்யும் இடமான மவுல்வி பசாருக்கு சென்று அதிக விலை கொடுத்து யானையை வாங்கி வந்துள்ளாராம்.

அத்துடன் யானையை பராமரிப்பதற்காக நபர் ஒருவரையும் வேலைக்கு வைத்துள்ளாராம்.

இதற்கு முன்பாக மனைவியின் ஆசைப்படி குதிரை, அன்னம் மற்றும் ஆடு போன்ற விலங்குகளையும் வாங்கி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.