ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Author
Praveen Rajendran- inWorld
Report
0Shares

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

ஆப்கானிஸ்தான் நாத்தின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 5.33 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.இது 4.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 5.46 மணிக்கு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது,இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.