ஆக்ஸ்போர்டு தடுப்பூசிய போட்டா குரங்கா மாறிடுவீங்க!

Author
Gokulan- inWorld
Report
0Shares
கொரோனாவுக்கு எதிராக பிரிட்டனில் தயாராகும் ஆக்ஸ்போர்டுதடுப்பூசியை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யா விஷம பிரச்சாரம் செய்து வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக கூறிவரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானது என்றும் அந்த தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள் குரங்காக மாறிவிடுவார்கள் என ரஷ்யா விஷம பிரச்சாரம் செய்து வருகிறது.

அத்துடன், சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற புகைப்படமும் ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.