அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்றா?

Author
Nalini- inWorld
Report
0Shares

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனையடுத்து, கடந்த 1-ந் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து மீண்ட டிரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பைடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்ததையடுத்து, ஜோ பைடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரசார குழுவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு தனது பிரசார பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.