மீண்டும் நியூசிலாந்தின் பிரதமரானார் ஜெசிந்தா ஆர்டர்ன்

Author
Fathima- inWorld
Report
0Shares

நியூசிலாந்து தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகியுள்ளார் ஜெசிந்தா ஆர்டர்ன்.

சமீபத்தில் நியூசிலாந்துப் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், மொத்த வாக்குகளில் 70 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளையும், கூட்டணிக் கட்சியாக க்ரீன் கட்சி 7.6 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு தேவையான பெரும்பான்மை வாக்குகளை தொழிலாளர் கட்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராகிறார் ஜெசிந்தா.

இதுகுறித்து பேசிய ஜெசிந்தா, என் மீதும், இந்த அரசின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

நாம் ஒவ்வொரு நியூசிலாந்து குடிமகனுக்காகவும் ஆட்சி புரிவோம். இன்றைய தேர்தல் முடிவுகள் வலிமையானவை. தொழிலாளர் கட்சி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.