கருப்பையை அறுத்து குழந்தையை திருடிய வழக்கு: மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

Author
Praveen Rajendran- inWorld
Report
0Shares

கருப்பையை அறுத்து குழந்தையை திருடிய வழக்கில் அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது, கடந்த ஜூலை மதம் முதல் மீண்டும் மரண தண்டனை அமலுக்கு வந்தது.

மீண்டும் மரண தண்டனை அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரையில் 9 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, அதில் முதல் பெண் இவர் தான்.

2004-ஆம் ஆண்டு ஸ்கிட்மோர் அருகே மிஸெளரி நகரில் வசித்து வந்த 23 வயது பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

8 மாத கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை கயிற்றால் நெரித்துள்ளார், கொலைகாரியிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள சமையலறைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கும் வந்த கொலைகாரி அங்கு இருந்த கத்தியை வைத்து ஸ்டின்னெட்டின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தன்னுடையதாக காட்டியுள்ளார்.

இவை அனைத்தும் அவர் மனநலம் இல்லாத நேரத்தில் நடந்தவை என வழக்கறிஞர் திட்டத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து நீதி மன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த மரண தண்டனை வருகிற டிசம்பர் 8ம் தேதி விஷ ஊசியின் மூலம் இண்டியானாவில் உள்ள ஃபெடரல் கரக்ஷனல் வளாகத்தில் நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.