சண்டை நிறுத்தத்தை மீறும் அஜர்பைஜான் ஆர்மேனியா: பலியாகும் அப்பாவி மக்கள்

Author
Irumporai- inWorld
Report
0Shares

போர் நிறுத்த உடன்படிக்கையினை மீறி அஜர்பைஜான் மீது ஆர்மேனியா நடத்திய ஏவுகணை தாக்குதலால் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

நாகோர்னோ காராபாக் எல்லை யார் சொந்தமாக்குவது என அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாதம் முதல் மோதல் தொடங்கியது.

இருதரப்பும் கடுமையாக தாக்கி கொண்டதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும்அப்பாவி மக்களும் பலியாகினர்.

இது தொடர்பாக ரஷியா தலையிட்டு சமாதானபடுத்தியதால் கடந்த வாரம் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.ஆனால் போர் நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் அஜர்பைஜானின் கஞ்சா நகரின் குடியிருப்பு பகுதியில் ஆர்மேனியா ராணுவம் ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள் 13பேரும் 40-க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிடையே சண்டை அதிகரிப்பதால்,அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா மோதல் தொடர்பாக திங்கட்கிழமை ஐநா விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.