சீனாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி

Author
Nalini- inWorld
Report
6471Shares

சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த உணவையே குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் தேதி சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.

சாப்பிட்டதும் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார்.

சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு சோள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின் இரைப்பை திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 அன்று தெரிவித்துள்ளது.

போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.

ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.

இது குறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும். இவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டவர்கள் வயிற்று வலி ஏற்பட்டு 24 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என அவர் தெரிவித்தார்.