பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்? அடுத்த பிரதமராகும் வாய்ப்பில் இந்தியர்!

Author
Irumporai- inWorld
Report
14560Shares

பிரதமர் பதவிக்கு வழங்கும் சம்பளம் போதவில்லை என்பதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றார். போரிஸ் ஜான்சன். பதவியேற்ற உடனே பிரெக்ஸிட், கொரோனா என அடுத்தடுத்த சிக்கல்களைச் சமாளித்துவரும் போரிஸ் ஜான்சன், தனது சம்பள விஷயத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்பு போரிஸ் ஜான்சன் பத்திரிகையாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார். இதில் மாதம்தோறும் சுமார் 1,80,000 பவுண்டுகள் வரை சம்பாதித்துவந்தாகவும் தற்போதுபிரிட்டன் பிரதமராக இருப்பதால் ஆண்டுக்கு 1,50,402 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது.

போரிஸ்ற்கு 6 குழந்தைகள் உள்ளனர், அவர்களுக்கான செலவினை சமாளிக்க வேண்டும். அதேபோல் விவாகரத்தான மனைவிக்கு சட்டப்படி மாதம் தோறும் ஜீவனாம்சமாக குறிப்பிட்ட தொகை அனுப்ப உள்ளதால் ஜான்சன் பயங்கர நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் பதவி விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை போரிஸ் ஜான்சன் பதவி விலகினால், அடுத்த பிரதமராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பவர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார்.

ரிஷி சுனக் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாரயண மூர்த்தியின் மருமகன் அதோடு போரிஸ் ஜான்சனின் ஆதரவு பெற்றவராகவும் நாட்டின் நிதி தலைவராகவும் உள்ளார்.

கொரோனா சமயத்தில் பிரிட்டன்னில் நிலவிய பொருளாதார நிலையினை சமாளித்ததில் ரிஷப்சுனக்கிற்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம், போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த போதுமுக்கிய பொறுப்புகளை ரிஷப்பிடம் கொடுத்து இருந்தார். ஒரு வேளை போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியினை ராஜினாமா செய்தால் அந்த இடத்திற்கு ரிஷ வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அன்று இந்தியாவை பிரிட்டன் ஆண்டதுபோல தற்போது பிரிட்டனையே கலக்கி வரும் ரிஷப் பிரதமரானால் கண்டிப்பாக வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமையும். போரிஸ் ராஜினாமா செய்வாரா?? ரிஷ பிரதமர் பதவியினை தக்க வைப்பாரா என்பதை இனி வரும் காலம்தான் கூற வேண்டும்..