டிரம்பினை வதம் செய்யும் கமலாஹாரிஸ் : சர்ச்சையினை கிளப்பிய டிவிட்டர் பதிவு!!

Author
Irumporai- inWorld
Report
357Shares

இந்திய வம்சாவளியும் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருமான கமலாஹாரிசை இந்து கடவுள துர்காவாக சித்தரித்து வெளியிடபட்ட புகைப்படம் இணையத்திலிருந்து நீக்கபட்டது.

டிவிட்டரில் தூர்க்காவாக சித்தரிக்கபட்ட கமலா ஹாரிஸ் அதிபர் டிரம்பினை வதம் செய்வது போலவும் அதில் சிங்கமாக ஜோபைடனும். மிகிஷாசுரனாக அதிபர் டிரம்ப் இருக்கும்படியும் ஒரு புகைப்படம் வெளியானது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க டிவிட்டரிலிருந்து இந்த புகைப்படம் நீக்கபட்டது. இந்த புகைபடத்தை கமலா ஹாரிஸ்ன் உறவினர் மீனா ஹாரிஸ் பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்விற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பினர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர் மீனா ஹாரிஸ் இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்..