இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்

Author
Irumporai- inWorld
Report
728Shares

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இங்கிலாந்து நீதி மன்றம் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையினை நீக்கபட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது..

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு ஈழத் தமிழர்களுக்கான விடிவாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் தடை நீக்கம் தொடர்பாக பிரிட்டன் அராசாங்கம் என்ன முடிவை எடுக்கவுள்ளது என்பதை பொறுத்தே தடை நீக்கம் தொடர்பான உறுதி தன்மையினை தெரிந்துகொள்ள முடியும்..