பாகிஸ்தான் பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் பலி,70 பேர் காயம்

Author
Irumporai- inWorld
Report
518Shares

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்த 7 பேரில் 4 பேர் பள்ளிக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகள் பையில் குண்டை வைத்து, பள்ளிக்குள் வைத்ததாக பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது குண்டு வெடிப்பு நடந்த இடத்தை காவல்துறையினர், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 70 பேர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.