ஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்

Author
Praveen Rajendran- inWorld
Report
2689Shares

எகிப்து நாட்டில் தனக்கு ஊனம் இருப்பதாக கூறி 30 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்த பெண் 5 மாடி வீடு கட்டியுள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் தான் நபீஷா(57) தனது 27 வயதில் கணவனை பிரிந்த நபீஷா பிழைப்புக்காக கடந்த 30 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்துள்ளார்.கடந்த சில நாட்களாக நபீஷாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின

கணவனால் கைவிடப்பட்ட பின்னர் சுமார் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார் தினமும் பிச்சையெடுக்கும் பணத்தை வங்கியில் சேமித்து வைத்து வந்துள்ளார்.அந்த சேமிப்பு தொகையின் மதிப்பு ரூ.1.5 கோடி என தெரியவந்துள்ளது.மேலும் அவருக்கு சொந்தமாக 5 மாடி வீடு இருப்பது அதனை வாடகைக்கு வீடும் சம்பாதித்தும் வந்துள்ளார்.

இருப்பினும் அவர் பிச்சை எடுப்பதை கைவிடவில்லை.மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள் தனக்கு காலில் அடிபட்டு வீல் சேரில் அமர்ந்து பிச்சை எடுத்தபோது நிறைய சம்பாதித்ததாவும் அதனாலே கை கால்கள் நன்றாக இருந்தும் தான் வீல் சேரிலே அமர்ந்து பிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.