அமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு

Author
Nalini- inWorld
Report
2321Shares

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறங்கி இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே இருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலுக்காக, 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக இந்த ஆண்டு இத்தனை அதிகம் பேர் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளதாக தகவலில் கூறப்படுகிறது.

புதன்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்டவா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளனர். இத்தகவலை அமெரிக்க தேர்தல் திட்ட அமைப்பு புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொரோனா நெருக்கடிக்கிடையே இந்த ஆண்டு அதிபா் தோதலில் முன்கூட்டியே பதிவாகும் வாக்குகளின் விகிதம் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.