காஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா

Author
Mohan Elango- inWorld
Report
5608Shares
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி இந்தியா வசமும், கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதிகள் பாகிஸ்தான் வசமும் இருந்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் உறவில் காஷ்மீர் சிக்கல் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. இருநாடுகளும் ஒன்றுபட்ட காஷ்மீர் மீது உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சவுதி அரேபியா புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சவுதி அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டில் உள்ள வரைபடத்தில் காஷ்மீர் பகுதியை இந்தியா, பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி தனி பிரதேசமாக காண்பித்துள்ளது.

முதலில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சவுதி அரசு நீக்கிவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் நன்றாக பார்த்தால் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியையும் நீக்கி தனி பிரதேசமாக அறிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது இரண்டு நாடுகளுக்கும் அதிர்ச்சையாக அமைந்துள்ளது.