தலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்

Author
Mohan Elango- inWorld
Report
8286Shares

பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ இஸ்லாம் மதத்தின் தலைவர் அல்லாவை பற்றி கேலி சித்திரத்தை வெளியிட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 12 பேர் உயிரழந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரான்ஸில் பேராசிரியர் ஒருவர் அல்லாவை பற்றிய கேலி சித்திரங்களை தன் மாணவர்களிடம் காண்பித்திருக்கிறார்.

இது அல்லாவை அவமதிப்பதாக ஒரு தரப்பும், இது கருத்து சுதந்திரம் என ஒரு தரப்பும் சொல்லி வந்தன. ஆனால் அந்த பேராசிரியர் சில தினங்கள் கழித்து கொடூரமான முறையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அடிப்படைவாதிகளின் செயல் குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்திருந்த சில கருத்துகள் கடும் சர்ச்சைக்குள்ளானது. இஸ்லாமிய நாடுகளுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவில் சுணக்கம் ஏற்பட்டது.

இஸ்லாம் பற்றி கருத்து தெரிவித்த மேக்ரோன் 'மனநலம் குன்றியிருக்கிறார்' என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்து மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. மேலும் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் எர்டோகன் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்லாமிய நாடுகள் ஒவ்வொன்றாக பிரான்ஸுக்கும் மேக்ரோனுக்கும் கண்டனம் தெரிவிக்க தொடங்கின. சமீபத்தில் எர்டோகன் பற்றி சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கேலி சித்திரம் ஒன்று பிரச்னைகளை மீண்டும் பூதாகரமாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் இருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

இதனையடுத்து பிரான்ஸ் அரசு அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. நிலைமை மேலும் சிக்கலாகக்கூடும் எனப் பல தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.