டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா பாதிப்பு

Author
Irumporai- inWorld
Report
591Shares

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதில் அமெரிக்காதான் உலகளவில் கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கை உள்ள நாடாகும்.

அந்த நாட்டின் அதிபர் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சிகிச்சையில் குணமானார்.

இந்த நிலையில் இப்போது அவரின் மூத்த மகன் டொண்டால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு சிகிச்சைப் பெற்று வருகிறார்.