அன்று தமிழகத்தில் சாலையில் வாழ்ந்தேன்.. இன்று கனடாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்: யார் அவர் தெரியுமா?

Author
Fathima- inWorld
Report
20410Shares

கனடாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஷாஸ் சாம்சன், தன்னுடைய கடந்த கால வாழ்வு பற்றி மிக உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

கனடாவின் டொரொண்டோவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன்(வயது 50), சமையல் கலை நிபுணரான இவர் தற்போது பெரிய ஹோட்டலை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில், கோயம்புத்தூரின் ரயில்வே டிராக் அருகே உள்ள குடிசை பகுதியில் நானும், என் அண்ணன்களும் பெற்றோருடன் வசித்து வந்தோம்.

என் தாய், தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தினர், ஒருநாள் பேருந்து நிலையத்தில் என்னை தனியாக விட்டுவிட்டு என் அண்ணன்கள் சென்றுவிட்டனர்.

என்ன செய்வதென்றே தெரியாமல் கஷ்டப்பட்டேன், சாலையில் சுற்றித் திரிந்தேன், அங்குள்ள ஹோட்டல் வாசலில் அமர்ந்து கொள்வேன்.

மீதமிருக்கும் சாப்பாட்டை குப்பை தொட்டியில் கொட்டுவார்கள், அதை சாப்பிட்டு வளர்ந்தேன், இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்துக் கொள்வேன்.

ஒருநாள் என்னை பார்த்த குழந்தைகள் நல அதிகாரிகள், என்னை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர், எட்டு வயதான என்னை கனடாவை சேர்ந்த சாம்சன் தம்பதியினர் தத்தெடுத்தனர்.

என்னை விருப்பம் போல் படிக்க வைத்தனர், சிறு வயதில் கஷ்டப்பட்டதால் சமையல் கலை நிபுணராக வேண்டும் என எண்ணினேன், தற்போது நான் ஹோட்டலின் முதலாளி.

என்னை போன்று கஷ்டப்படும் 22 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.