மனித மாமிசம் சாப்பிட ஆசை - நண்பரை கொன்று சாப்பிட்ட ஆசிரியர் - நடுங்க வைத்த சம்பவம்

Author
Nalini- inWorld
Report
12284Shares

ஜேர்மனியில் டேட்டிங் தளம் ஒன்றில் அறிமுகமான நண்பரை படுகொலை செய்து, உணவாக சாப்பிட்ட பாடசாலை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெர்லின் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் கண்டுடெடுக்கப்பட்டது. அப்போது, மோப்ப நாய்களின் உதவியுடன் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஜேர்மனியின் Pankow மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியராக பணியாற்றும் 41 வயது Stefan என்பவரையே போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் பேசுகையில், ஸ்டீபன் மனித மாமிசம் உணவாக சாப்பிடும் ஆசை கொண்டவர். இதற்காக மனித மாமிசம் எப்படி உணவாக்குவது என்று இணையத்தில் அதிகமான தகவல் சேகரித்துள்ளார்.

மேலும், ஆணுறுப்பு துண்டான பின்னர் ஒரு மனிதரால் உயிர் வாழ முடியுமா என்பது போன்ற தகவலையும் ஸ்டீபன் இணையத்தில் தேடியிருக்கிறார். செப்டம்பர் தொடக்கத்தில் 44 வயதான மின் ஊழியர் Stefan Trogisch என்பவர் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து, நவம்பர் 8-ம் திகதி பூங்கா ஒன்றில், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. மட்டுமின்றி, அந்த எலும்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள், மனித மாமிசம் சாப்பிடுவர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்டனர்.

இந்த நிலையிலேயே மோப்ப நாய்களின் உதவியுடன் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபனின் குடியிருப்புக்குள் போலீசார் புகுந்தனர்.

இந்த வழக்கு தொடர்பில் போதிய ஆதாரங்களை கைப்பற்றிய பொலிசார், அவரை உடனையே கைது செய்துள்ளனர் என்றார்.

ஆதாரங்கள் மொத்தம் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக இருந்தாலும் போலீசார் விசாரணையில் அதிகாரிகளிடம் அவர் பேச மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.