பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட 1,300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில்

Author
Irumporai- inWorld
Report
1407Shares

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டம் பரிகோட் பகுதியில் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அங்கு விஷ்ணுவுக்கு கட்டப்பட்ட இந்து கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. சாஹி அரச வம்ச காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

மேலும் இந்த கோயிலுக்கு அருகே தண்ணீர் தொட்டி ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பக்தர்கள் நீராடுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஸ்வாட் மாவட்டம் பகுதியில் புத்த மதம் தொடர்பான நினைவு சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,முதல்முறையாக ஹிந்து கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.