மெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி பரிசுகள் வழங்கிய துபாய் இளவரசி!

Author
Irumporai- inWorld
Report

மெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க துபாயின் இளவரசி ஹயா 12 கோடிக்கும் அதிகமான பரிசுகளை வழங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா, இவர் தனது ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்ற மெய்க்காப்பாளருடன் இரண்டு வருடம் தொடர்பு குறித்து யாருக்கும் கூறாமல் இருக்க மெய்காப்பாளருக்கு ரூ.11.85 கோடி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இளவரசி ஹயா மெய்க்காப்பாளருக்கு பல விலையுயர்ந்த பரிசுகளையும் வழங்கினார், இதில் ரூ.11.85 கோடி மதிப்புள்ள கடிகாரமும் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இளவரசி ஹயா 37 வயதான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸை எப்போதும் தனது பக்கத்திலேயே இருப்பதை உறுதிசெய்ய தனது பணத்தை பயன்படுத்தி உள்ளார்

இந்த விவகாரம் பற்றி ஃப்ளவர்ஸ் மனைவி அறிந்ததும், அவர் முற்றிலும் உடைந்துவிட்டதாகவும், ஃப்ளோவர்ஸை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் (டெய்லி மெயில் )செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசி ஹயா மற்றும் அவரது 70 வயதான கணவருக்கு இடையேயான விவகாரத்தில் உயர்நீதிமன்ற விசாரணையின்போது இளவரசி ஹயா மற்றும் ரஸ்ஸலுக்கு இடையிலான ரகசிய உறவு அம்பலமானது.

இந்த நிலையில் இளவரசி ஹயா தனது குழந்தைகளுடன் மேற்கு லண்டனில் வசித்து வருகிறார்.