பலவீனத்தை மறைக்க சீனா மீது ஜோபைடன் போரை தொடங்குவார்: சீன ஆலோசகர் சர்ச்சை பேச்சு

Author
Irumporai- inWorld
Report

உள்நாட்டு பிரச்னைகளை தீர்க்க முடியாமல் போனால் தனது பலவீனத்தை மறைக்க, புதிய அதிபர் ஜோ பைடன் சீனா மீது போர் தொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக, சீன அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவில் இருந்த போது அமெரிக்கா, சீனா இடையேயான உறவு சீர்குலைந்தது. இரு நாடுகளும் கடுமையான வர்த்தக போரில் ஈடுபட்டன.

புதிய அதிபராக ஜொபைடன் தேர்வாகி இருப்பதால் அமெரிக்க-சீன உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என சீனா மறுத்துள்ளது.

இந்த நிலையில் சீனா அரசு அமைப்பின் ஆலோசகருமான ஜெங் யாங்னியன், (சவுத் சீனா மார்னிங் போஸ்ட்) அளித்த பேட்டியில் .

அமெரிக்கா-சீனா இடையிலான நல்ல நட்புறவு முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டதாக கூறினார்.

மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பனிப்போர் மீண்டும் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறினார்.

தற்போது புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு சென்ற பின்பு, ஒரு வேளை மக்கள் மனதில் பலவீனமான அதிபராகவே கருதப்படும் நிலை வந்தால்.

தனது பலவீனத்தை மறைக்க, அவர் சீனா மீது போர் தொடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.என கூறினார்.

மேலும் அதிபர் டிரம்பின் ஆட்சி காலத்தில் கோவிட்-19, வர்த்தகம், எனபல்வேறு பிரச்னைகளால் இரு நாடுகளுக்கும் இருந்தது .

ஆனால் அதிபர் டிரம்ப் போரை விரும்பவில்லை. அதே சமயம் ஜோ பைடன் பலவீனமானவ்ராக கருதபட்டால் போரைத் தொடங்கினாலும் தொடங்குவார்.என ஜெங் கூறி உள்ளார்.

சீன ஆலோசகரின் இந்த சர்ச்சை பேச்சு உலகளாவிய அரசியல் விமர்சகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது