ஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்

Author
Praveen Rajendran- inWorld
Report

அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்.

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அவர்கள் வெற்றிபெற்றார். மேலும் அவர் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதியாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் தேர்வானார். இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பதவி ஏற்கப்போகும் புதிய ஜனாதிபதி பைடன் அவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில்,

“அமெரிக்காவில் சிறந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியாக ஜோ பைடன் இருப்பார். உலகம் மதிக்கும் ஒரு தலைவரை நம் குழந்தைகள் காணப்போகிறது. நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படை தளபதியாகவும், அனைத்து அமெரிக்கர்களுக்கான சிறப்பான ஜனாதிபதியாகவும் அவர் திகழ்வார்” என குறிப்பிட்டுள்ளார்.