2020ம் ஆண்டு நடைபட்டறை அமெரிக்கா அதிபர் தேர்தல் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்துள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அவர்கள் வெற்றிபெற்றார். மேலும் அவர் அமெரிக்காவின் 46வது அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவரது வெற்றியின் மீது டொனால்ட் டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து மாரு வாகு எண்ணிக்கைகளும் நடைபெற்று ஜோ பாய்டனின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “நமது 2020 ஜனாதிபதி தேர்தல் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் இதுவாகும்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் அவர் “தேர்தலில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இது அனைவருக்கும் தெரியும். ஒபாமாவை விட ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து அதிக வாக்குகளைப் பெறவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயமாக 8 கோடி வாக்குகளை அவர் பெறவில்லை. டெட்ராய்ட், பிலடெல்பியாவில் என்ன நடந்தது என்று பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.