சொந்த கட்சியிலே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு கிளம்பியது

Author
Praveen Rajendran- inWorld
Report

புதிய ராணுவ அதிகாரியை நியமிப்பதில் ஜோ பைடனுக்கு சொந்த கட்சியிலே அழுத்தினாள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் அவர்கள் அடுத்த மதம் பதவி ஏற்கவுள்ள நிலையில் தனது மந்திரி சபையில் இடம் பெறப்போகும் நபர்களின் பட்டியலை தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். புதிய ராணுவ மந்திரியாக, அந்த துறையின் முன்னாள் துணை மந்திரியான மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்.

இதற்கு அவரது சொந்த கட்சியிலே பல எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் ஆப்பிரிக்கா அமெரிக்கர் ஒருவரையே புதிய ராணுவ மந்திரியாக நியமிக்க வேண்டும் என கறுப்பின தலைவர்கள் ஜோ பைடன் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மிச்செலி புளூர்னாயின் கடந்த காலா வரலாறை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு அமைப்பினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய சூழலில் பைடனுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.