அமெரிக்கா முழுவதும் ஆயுதம் ஏந்தியவர்கள் கலவரம் நடத்தக்கூடும்: எஃப்.பி.ஐ எச்சரிக்கை

Author
Mohan Elango- inWorld
Report

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் இறுதிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபட்டார்.

இறுதியாக தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ட்ரம்ப் தான் இந்த வன்முறையை தூண்டிவிட்டதாக அவருடைய சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் வருகிற 20-ம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். அதற்குள் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.